'கே.ஜி.எஃப்.', 'சலார்' திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் அஜித்துடன் இரு திரைப்படங்களில் இணைய உள்ளதாகவும் அது, அஜித்தின் 64 மற்றும் 65 படங்களாகவோ அல்லது 65 மற்றும் 66 ஆவது படங்களாகவோ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்படம் பிரசாந்த் நீலின் யூனிவர்சிற்குள் வரும். கே.ஜி.எஃப் 3-ல் யஷூடன் அஜித் இணைவதாகவும், அப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம், அஜித்தும், இயக்குனர் பிரசாந்த் நீலும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பின் போது சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.