சினிமா செய்திகள்

விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு!

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வென்றுள்ளது.

தவெக வெற்றிக்கு அதன் தலைவர் விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி உள்ளிட்ட ரீமேக் படங்களில் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய அளவுகோல்களை அமைத்து, ஒரு பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டிய நடிகர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையை இன்றைய தினம்(நேற்று) பிரதிபலிக்கிறது... இந்த வெற்றியானது தமிழ்நாட்டிற்குப் பயனுள்ள முன்னேற்றமாக நிச்சயம் உருவெடுக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.