திரைத்துறையில் இருந்து வந்த விஜய் 2 ஆண்டுகள் முன் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி கடந்த ஏப்ரலில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி இதர கட்சிகள் ஆதரவில் ஆட்சி அமைத்து முதல்வர் ஆனார்.
மே 10 அவர் முதல்வர் பதவி ஏற்றது முதல் அவரை பல்வேறு திரைபிரபலன்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெங்கட் பிரபு, விக்ரம் பிரபு, எம்எஸ் பாஸ்கர் என இப்பட்டியல் நீடுகொண்டே செல்லும் நிலையில் விஜய் சினிமாவில் இருந்த காலத்தில் அவருடன் வசீகரா, கோட் படங்களில் ஜோடியாக நடித்திருந்த புன்னைகை அரசி சினேகா தற்போது முதல்வர் விஜயை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
அவருடன் அவரது கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகள் சென்றுள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு சினேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .
அவரது பதிவில், “விஜய் சாருடன் இரண்டு படங்கள் பணியாற்றியிருக்கிறேன். இன்று தமிழகத்தின் முதல்வராக அவரைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும்.
தற்போதும் கருணையுடன், மிகவும் எளிமையான எனக்குத் தெரிந்த அதே மனிதராகவே இருக்கிறார். அவருக்குக் கூடுதல் பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.