அனிருத் - விஜய் 
சினிமா செய்திகள்

இந்த முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்.. அனிருத் நெகிழ்ச்சி

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாலை மலர்

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் - தளபதி 67

விஜய் - லோகேஷ் கனகராஜ் - தளபதி 67

தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

தளபதி 67

தளபதி 67

இந்நிலையில் தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் அனிருத், லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் இணைந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் அனிருத் பதிவிட்டுள்ளார். அதில், அன்பான தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் ஒருமுறை இணைவதில் மகிழ்ச்சி. இந்த முறை, இது ஒரு அணுகுண்டு வெடியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.