தயாரிப்பாளர் லலித் - பா ரஞ்சித் 
சினிமா செய்திகள்

ரைட்டர் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் மாஸ்டர் தயாரிப்பாளர்

மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரின் அடுத்த படைப்பை ரைட்டர் பட இயக்குனர் இயக்கவிருக்கிறார்.

மாலை மலர்

காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்து கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கி நல்ல பாராட்டுக்களை பெற்றார். இதன் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் கோப்ரா, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் தயாரிப்பாளருமான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.