புஷ்பா 
சினிமா செய்திகள்

புஷ்பா படத்தின் டீசர் ரெடி..! எப்போது வெளியாகிறது..?

இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள தேதி குறித்த புதிய தகவல் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

மாலை மலர்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா

புஷ்பா

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

புஷ்பா

புஷ்பா

இந்நிலையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தாளான வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த டீசர் படத்தின் கதைக்களத்தை உணத்தும் விதத்தில் மூன்று நிமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.