கட்டா குஸ்தி 
சினிமா செய்திகள்

ரூ.30 கோடி வசூலை கடக்கும் 'கட்டா குஸ்தி'.. மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த திரைப்படம் ‘கட்ட குஸ்தி’. இப்படம் ரசிகர்கள் மத்தில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

கட்டா குஸ்தி

இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது, "9 படங்கள் என்னைவிட்டு சென்றன. நம்பிக்கையுடன் இருந்தேன். இன்று என் கையில் 9 படங்கள் இருக்கின்றன. 'எஃப்ஐஆர்' படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்துவிட்டது. ரூ.30 கோடியை 'கட்டா குஸ்தி' திரைப்படம் கடக்கப்போகிறது" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.