விஜய் சேதுபதி 
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.