வாரிசு 
சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் வீடியோ..

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு

2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

விஜய்

இந்நிலையில் வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று (31.7.2022) சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்றதாக கூறப்படுகிறது.  மேலும், அவர் சென்னை விமான நிலையம் வந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT