வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வாடிவாசல்
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் வாடிவாசல் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் வலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. அதில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் இயக்குனர் வெற்றிமாறனும், சூர்யாவும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.