வாரிசு - விஜய் 
சினிமா செய்திகள்

இணையத்தில் கசிந்த வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு - விஜய்

வாரிசு - விஜய்

வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது போன்ற வீடியோ ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். விஜய் மாஸாக நடந்து வருவது போன்று இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT