உதயநிதி ஸ்டாலின் 
சினிமா செய்திகள்

முதல் நாளே படப்பிடிப்பை கட் அடித்த உதயநிதி ஸ்டாலின்

நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் முதல் நாள் படப்பிடிப்பை கட் அடித்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது, 'ராதே ஷ்யாம் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் மாமன்னன் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முதல் நாளே நான் கட் அடித்து விட்டு இந்த விழாவிற்கு வந்து இருக்கிறேன். அந்த அளவிற்கு இந்த படம் எனக்கு முக்கியம். ராதே ஷ்யாம் திரைப்படத்தை மார்ச் 11 ஆம் தேதி 175 திரையங்களில் வெளியிடுகிறேன்' என்றார்.