ஆர்யன் ஷ்யாம் 
சினிமா செய்திகள்

நடிகர் ஆர்யன் ஷ்யாமுக்கு பட்டம் வழங்கிய திருப்பதி தேவஸ்தானம்

பிரம்மாண்ட நாயகன் படத்தில் பகவான் பாலாஜியாக நடித்ததற்காக ஆர்யன் ஷ்யாமிற்கு திருப்பதி தேவஸ்தானம் பட்டம் வழங்கி இருக்கிறது.

மாலை மலர்

ஆர்யன் ஷ்யாம் தற்போது பிரம்மாண்ட நாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதியாக ஆர்யன் ஷ்யாம் நடித்திருக்கிறார். இப்படத்தை பார்த்த திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அவரது குழுவினர், இயக்குனர் பாம்பே ஞானத்தையும், திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக நடித்த ஆர்யன் ஷ்யாமை கட்டி பிடித்து பாராட்டி இருக்கிறார்கள். 

மேலும் பகவான் பாலாஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்துக்காட்டியிருக்கிறீர்கள். அவரை திரைப்படம் மூலமாக தரிசனம் பண்ற பாக்கியத்தை கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறியதோடு, இப்படத்தில் விரதம் இருந்து நடித்ததை அறிந்து, யூத் சூப்பர் ஸ்டார், (Youth Superstar) என்ற பட்டத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். 

ஆர்யன் ஷ்யாம்

மேலும் ஆர்யன் ஷ்யாமுக்கு இது சம்பந்தமாக தேவஸ்தான தலைவர் துஷ்மந்த் குமார்தாஸ் பாராட்டி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆர்யன் ஷ்யாம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அந்த நாள்' திரைப்படமும் விரைவில் வெளிவரவிருக்கிறது.