சினிமா செய்திகள்

நான் நினைக்குறது சரியா இருந்துட்டா.. ட்ரெண்டாகும் 'தி ரோட்' டிரைலர்

இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி ரோட்' .இப்படம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாலை மலர்

தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.