தி லெஜண்ட் 
சினிமா செய்திகள்

மீண்டும் வெளியாகும் தி லெஜண்ட் திரைப்படம்

இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'.இப்படத்தின் கதாநாயகியாக இந்தி பட நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.

மாலை மலர்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

தி லெஜண்ட்

தி லெஜண்ட்

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தி லெஜண்ட்

தி லெஜண்ட்

இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் நாளை (03.03.2023) அன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.