'தேஜாவு' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். மேலும், ராஜ் ஐயப்பன், பால சரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தருணம்' திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.