தண்டட்டி 
சினிமா செய்திகள்

தண்டட்டி படத்துக்காக பாட்டிகளுக்கு பரிசு வழங்கிய இயக்குனர்

இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தண்டட்டி’.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

மாலை மலர்

அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் நடந்த இந்த படத்தின் விழாவில் 'தண்டட்டி' அப்பத்தாக்களை வரவழைத்தார்கள். ஒவ்வொருவரின் பெயர்களை எழுதி சீட்டுக் குலுக்கி எடுத்து, அதில் யார் பெயர் வந்ததோ அந்த அப்பத்தாவிற்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.