சினிமா செய்திகள்

தளபதி 68 படத்தில் மும்முரம் காட்டும் நடிகர் விஜய்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'தளபதி 68'.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு நவம்பர் 1-ஆம் தேதி தாய்லாந்து சென்றதாக தகவல் வெளியானது.

நடிகர் விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய் 'தளபதி 68' படப்பிடிப்பிற்காக தாய்லாந்து புறப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.