விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
விஜய் - லோகேஷ் கனகராஜ்
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.
விஜய் - லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "வாரிசு திரைப்படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக தான் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தோம். இப்போது வாரிசு படம் ரிலீஸாகிவிட்டது. இன்னும் ஒரு பத்து நாட்களில் அப்டேட் எதிர்பார்க்கலாம். இனி தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகும்" என கூறினார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.