சூர்யா 42 
சினிமா செய்திகள்

சூர்யா -42 அப்டேட் கொடுத்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘சூர்யா 42’. இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை மலர்

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா 42போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகிற 16-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.