சூரகன் 
சினிமா செய்திகள்

இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்த சூரகன் படம்

சதிஷ் ஜி குமார் இயக்கும் சூரகன் திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மாலை மலர்

அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் அடுத்ததாக இயக்க உள்ள படம் "சூரகன்". தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பாக வி.கார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இப்படத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், கே.ஜி.எஸ். வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சூரகன்

சூரகன்

சதீஷ் ஜி குமார் ஒளிப்பதிவு இயக்கம் செய்யும் இப்படத்தில் இணைந்து ஜேசன் வில்லயம்ஸ் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து இப்படத்திற்கான படப்பிடிப்பினை துவக்கி வைத்தார். மேலும், இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.