ஸ்க்விட் கேம் 
சினிமா செய்திகள்

மீண்டும் வரும் ஸ்குவிட் கேம்: உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் ஓடிடி தளம் ஒன்றில் 'ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் வெளியானது.தற்போது இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் வெப்தொடரான 'ஸ்குவிட் கேம்' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வெப்தொடரானது வெளியான முதல் நான்கு வாரங்களிலேயே 1.65 பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. ரசிகர்கள் இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிவந்தனர். இதையடுத்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் வெளியாக உள்ளதை நெட்ஃபிளிக்ஸ் சமூக வலைதளத்தில் சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்க்விட் கேம்

ஸ்க்விட் கேம்


இது தொடர்பாக ஹ்வாங் டாங் ஹியூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்குவிட் கேம் தொடரின் முதல் சீசனை வெளியிடுவதற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்ட தொடராக 'ஸ்குவிட் கேம்' மாறியதற்கு வெறும் 12 நாட்களே தேவைப்பட்டன. தொடரை பார்த்து ரசித்தற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.