சவுகார் ஜானகி 
சினிமா செய்திகள்

91- வது வயதில் விருது கிடைத்தது மகிழ்ச்சி - சவுகார் ஜானகி

91-வது வயதில் பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை சவுகார் ஜானகி பேட்டி அளித்துள்ளார்.

பாலசந்தர் இயக்கிய ஏராளமான படங்களில் நடித்தார். இதில் இரு கோடுகள், பாமா விஜயம், எதிர்நீச்சல் ஆகியவை அடங்கும். எதிர்நீச்சல் படத்தில் அவர் நடித்த பட்டுமாமி கதாபாத்திரம் தேசிய அளவில் புகழ் பெற்றது.

புதிய பறவை, தில்லுமுல்லு படங்களில் கிளப் பாடகியாக நடித்துள்ளார். இவர் ஜெமினி கணேசனின் தோழி ஆவார். சவுகார் ஜானகியின் திறமைகளை ஜெமினி கணேசன் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

விருது பெற்றது குறித்து சவுகார் ஜானகி கூறுகையில், “தான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். எனது 91-வது பிறந்த நாளுக்கு பிறகு இந்த விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.