இதில் விஜய குமார், அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சிவகுமார் பேசும் போது, ஓ மை டாக் திரைப்படத்தை இயக்கி இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரே படத்தில் அப்பா மகன் பேரன் நடிக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. தெலுங்கில் நாகார்ஜூனா குடும்பத்திற்கு பிறகு, தமிழில் விஜயகுமார் குடும்பத்திற்கு அமைந்திருக்கிறது.
நானும் விஜயகுமாரும் நீண்டகால நண்பர்கள். என்னை விட நான்கு வயது சிறுவன். ஆனால் நடிப்பில் எனக்கு சீனியர். நிறைய படங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார் என்றார்.