சிவகார்த்திகேயன் 
சினிமா செய்திகள்

அடுத்த அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன் படக்குழு

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் பிரின்ஸ்.பிரின்ஸ் படத்தில் ரியா போஷாப்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் பட போஸ்டர்

இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்  நாளை காலை 10.10 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை  படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.