சினிமா செய்திகள்

வசூலை குவிக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'.இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

நடிகர் ரஜினி 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ரூ.89 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

'மாவீரன்' திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT