சிவகார்த்திகேயன் 
சினிமா செய்திகள்

தீபாவளியை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலை மலர்

டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான்

அயலான்

இந்நிலையில், அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.