துல்கர் சல்மான் 
சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் 'சீதா ராமம்'.இதில் துல்கருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

சீதா ராமம்

ஸ்வப்னா சினிமா தயாரித்த இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிட்டது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, "சீதா ராமம்" திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சீதா ராமம் போஸ்டர்

அண்மையில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு "சீதா ராமம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்" என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.