வாணி ஜெயராம் 
சினிமா செய்திகள்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்

வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம்.வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

வாணி ஜெயராம்

சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT