சாந்தனு 
சினிமா செய்திகள்

சாந்தனுவுடன் கைகோர்த்த விஜய்சேதுபதி பட நடிகை

விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்த கதாநாயகி ஒருவர் சாந்தனுவுடன் காதல் ஆல்பம் ஒன்றிருக்கு இணைந்திருக்கிறார்.

சமீபத்தில் பல நடிகர்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பெற்று வருகின்றனர். அதே பாணியில் திரைகதையின் நாயகன் பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனுவும் களத்தில் இறங்கியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தில் நடித்த மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். ஆதவ் கண்ணதாசன் இயக்கி இருக்கும் இந்த ஆல்பத்திற்கு 'குண்டுமல்லி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

இது பற்றி மகிமா நம்பியார் கூறியதாவது, ஆதவை எனக்கும் ஐந்தாறு வருடங்களாகத் தெரியும் என்றாலும், அவருக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதை இந்த ஆல்பத்தில் நடித்தபோது தான் தெரிந்துகொண்டேன். நிச்சயம் அவர் நல்ல தரமான படத்தை விரைவில் இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடிப்பார். திரைப்படப்பாடல்களில் நடிக்க நமக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். ஆனால் ஆல்பத்தில் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் காதல் மூடுக்கு வந்துவிடவேண்டும் அப்படிதான் சாந்தனுவை பார்த்ததும் காதல் செய்ய ஆரம்பித்தேன்’ என்றார்.