ருத்ரன் 
சினிமா செய்திகள்

ருத்ரன் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘ ருத்ரன்’ திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகினார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ருத்ரன்

ருத்ரன்

இந்நிலையில் ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்திய பிரகாஷ் , நித்ய ஸ்ரீ குரலில் வெளியான இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT