ரன் பேபி ரன் 
சினிமா செய்திகள்

மீண்டும் வெளியாகும் 'ரன் பேபி ரன்'.. வைரலாகும் போஸ்டர்..

இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் 'ரன் பேபி ரன்'. இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

மாலை மலர்

இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் 'ரன் பேபி ரன்'.இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ரன் பேபி ரன்

இப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரன் பேபி ரன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.