சினிமா செய்திகள்

ராம்சரணின் ஆர்சி15 படத்தின் தலைப்பு இதுவா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் 'ஆர்சி15'.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது. ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக பேசப்பட்டது.

ஆர்சி15

ஆர்சி15

இந்நிலையில் ஆர்சி15 படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு சிஇஒ (CEO - Chief Electoral Officer) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மார்ச் 27ம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.