சினிமா செய்திகள்

இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. மாமன்னன் குறித்து ரவீனா ரவி டுவீட்

மாரி செல்வராஜ் இயக்கியிருந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் ரவீனா ரவி, ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியையும், கதாபாத்திரங்களையும் பாராட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக நடித்த ஃபகத் பாசிலின் மனைவியாக ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரவினா ரவி அந்த பாத்திரம் குறித்து நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

அதில், "இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT