சினிமா செய்திகள்

கருப்பு நிற கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள்

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது.

இவர் நடிப்பில் வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ரம்யா பாண்டியன் மலையாளத்தில் நன்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ரம்யா பாண்டியன், தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து தற்போது வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT