தமிழில் 2002-ல் வெளியான 'பைவ் ஸ்டார்' படம் மூலம் அறிமுகமான பிரசன்னா அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், சீனா தானா, சாதுமிரண்டா, கண்ணும் கண்ணும், முரண், மாபியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. திருட்டு பயலே 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பிரசன்னா
தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது துப்பறிவாளன் 2-ம் பாகம் படம் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் பிரசன்னாவுக்கு இந்தி வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்தியில் நடிக்கும் மகிழ்ச்சியை சமூக வலைத்தலத்தில் பிரசன்னா பகிர்ந்திருந்தார். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து இந்தி வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசன்னாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.