ஹரிஷ் கல்யாண் 
சினிமா செய்திகள்

போஸ்டர் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஹரிஷ் கல்யாண் படக்குழு

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

எல்.ஜி.எம் - தோனி

எல்.ஜி.எம் - தோனி

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.

எல்.ஜி.எம் 

எல்.ஜி.எம் 

இந்நிலையில் 'எல்.ஜி.எம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் நதியா இடம்பெற்றிருக்கும் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.