பொன்னியின் செல்வன் படக்குழு 
சினிமா செய்திகள்

கோவையை தொடர்ந்து டெல்லிக்கு படையெடுத்த பொன்னியின் செல்வன் படக்குழு

’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் படக்குழு

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு நேற்று முன்தினம் கோயம்பத்தூருக்கு சென்றிருந்தனர். அதன்பின்னர் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு இன்று இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு படையெடுத்துள்ளது. அப்போது விமானத்தின் முன்பு கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம், திரிஷா, சோபிதா மற்றும் ஜெயம் ரவி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

SCROLL FOR NEXT