பத்து தல 
சினிமா செய்திகள்

'பத்து தல' படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று என்ன தெரியுமா..?

இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாலை மலர்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பத்து தல

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பத்து தல

இந்நிலையில், 'பத்து தல' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியாக அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.