பத்து தல 
சினிமா செய்திகள்

பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.இப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாலை மலர்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

பத்து தல

பத்து தல

கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

பத்து தல

பத்து தல

இந்நிலையில் 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி பத்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கவர்ந்து வருகிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.