இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.
பதான்
பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், வசூல் சாதனையைத் தொடர்ந்து 'பதான்' படக்குழு அதிரடி முடிவெடுத்துள்ளது.
பதான் போஸ்டர்
அதாவது, இப்படத்தின் டிக்கெட் விலையை இன்று ஒரு நாள் மட்டும் ரூ.110 ஆக படக்குழு குறைத்துள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.