ஓ.பன்னீர்செலவம் - பாரதிராஜா 
சினிமா செய்திகள்

பாரதிராஜாவை நேரில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.தற்போது இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

பாரதிராஜா

பாரதிராஜா

சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நலம் விசாரித்து வந்தனர்.

பாரதிராஜாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

பாரதிராஜாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில் சென்னையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.