சினிமா செய்திகள்

ஸ்டார் படத்தின் புது அப்டேட் வெளியிட்ட படக்குழு

ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

மாலை மலர்

இயக்குநர் எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தில் லால், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்றுள்ள "ஸ்டார் இன் தி மேக்கிங்" பாடலின் ஆர்கெஸ்ட்ரா வெர்ஷனை படக்குழு வெளியிட்டு உள்ளது.