சினிமா செய்திகள்

குடும்பமா தியேட்டருக்கு வாங்க - ஸ்டார் படத்தின் சென்சார் அப்டேட்

இந்த படத்தில் கவின், லால், கீதா கைலாசம் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாலை மலர்

டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் மற்றும் இயக்குநர் இளன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஸ்டார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மே 10 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் சென்சார் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்டார் படத்திற்கு சென்சார் போர்டு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த படத்தில் கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.