சினிமா செய்திகள்

செஞ்சு முடிக்கிறனோ இல்லையோ, இனிமே இது என்னோட வேலை.. வைரலாகும் அயலான் டிரைலர்

'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மாலை மலர்

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், அயலான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த படம் குடும்பங்கள் பார்த்து ரசிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.