தனுஷ் 
சினிமா செய்திகள்

முதல் நாளிலேயே வசூல் அள்ளிய தனுஷ் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு..

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

மாலை மலர்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நானே வருவேன்

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'நானே வருவேன்' திரைப்படம் முதல் நாளிலே ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.