மிருணாள் தாகூர் 
சினிமா செய்திகள்

தெலுங்கு படத்தில் நடிக்க மிருணாள் தாகூர் வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

'சீதா ராமம்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மிருணாள் தாகூர்.இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மாலை மலர்

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார். மேலும், இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் மிருணாள் தாகூர் சூர்யாவின் 42-வது படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்றொரு தமிழ் படத்தில் இவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். இந்நிலையில், தற்போது மிருணாள் தாகூர் தெலுங்கு படம் ஒன்றிற்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, தெலுங்கில் நானிக்கு ஜோடியாக இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இந்த படத்திற்காக மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவுக்கு வந்து குறுகிய நாட்களிலேயே மிருணாள் தாகூர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது சக நடிகைகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.