மீரா ஜாஸ்மின் 
சினிமா செய்திகள்

தமிழில் ரீ -என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.. சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..

நடிகை மீரா ஜாஸ்மின் 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.

மீரா ஜாஸ்மின்

மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் இதுவே அவர் கடைசியாக நடித்த திரைப்படம். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விமானம் போஸ்டர்

அந்த வகையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'விமானம்' படக்குழு மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.