சினிமா செய்திகள்

வாழ்க்கை எப்போதும் ஒரு மாயவலை தான்- வைரலாகும் அமீர் பட டீசர்

அமீர் நடித்து வரும் திரைப்படம் ‘மாயவலை’.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மாலை மலர்

ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அமீர், வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மாயவலை'. வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம் ஜி ஒளிப்பதிவு செய்ய எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 'மாயவலை' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை இயக்குனர் சமுத்திரகனி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.