அஜித் - மஞ்சு வாரியர் 
சினிமா செய்திகள்

அஜித்தின் பைக் ட்ரிப்.. அட்வென்சர் பயணத்தில் இணைந்த பிரபல நடிகை..

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்

 இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மஞ்சு வாரியர் - அஜித்

இந்நிலையில், லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்து வருகிறார். இது குறித்து மஞ்சு வாரியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்" என்று குறிப்பிட்டு பயணத்தின்போது அஜித் உடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT